பள்ளிவாசலில் என்ன நடைபெறுகிறது - மாற்றுமத சகோதரர்கள் நேரில் சென்று பார்வை
- ஹஸ்பர் -
இஸ்லாமியரின் பள்ளிவாசலை நேரடியாக சகோதர இன மக்கள் பார்வையிட்டு அங்கு நடைபெறும் விடயங்களை தெளிவுபடுத்தும் நோக்கிலான பள்ளிவாசல் சுற்றுப்பயணம் நிகழ்ச்சி இன்று (05) திருகோணமலை அனுராதபுர சந்தி அல்ஹுலூர் ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது.
பள்ளிவாசலில் மேற்கொள்ளப்படும் வழிபாட்டு விடயங்களை எடுத்துக்காட்டல்,இஸ்லாமிய நடைமுறைகள், ஆன்மீக விழுமியங்கள், இஸ்லாம் சமயம் குறித்தான தப்பபிப்பிராயங்களை தெளிவுபடுத்தல் போன்ற பல விடயங்களை உள்ளடக்கியதாக இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
சகோதர மக்களிடையே உள்ள உறவை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சர்வமத தலைவர்கள், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம, மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள், மாணவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,பெண்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
Post a Comment