Header Ads



இஸ்லாமிய அடிப்படைவாத நிபுணர் எனக் கூறப்பட்ட, ரொஹான் குணரத்ன ராஜினாமா..?


பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக இருந்த ரொஹான் குணரத்ன ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் வரும் ஒரு சிந்தனைக் குழுவிற்கு தலைமை தாங்கிய அந்த ஆலோசகர் சம்பிரதாயமின்றி வெளியேறியதாக பாதுகாப்பு தரப்புக்களில் பேசப்படுகிறது.


வடக்கு போராட்டத்தின் போது பயங்கரவாத நிபுணராக தன்னைத் தானே கூறிக்கொண்ட இந்த ஆலோசகர், பின்னர் 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றிய நிபுணராகப் பணிபுரிந்தார்.


அவருக்கு ஒரு குறிப்பிட்ட பணியுடன் வெளிநாட்டில் தங்கியிருந்தபோது பதவி வழங்கப்பட்டது.


 சில நாட்களுக்குப் பிறகு தனது ராஜினாமாவை அனுப்பியுள்ளதுடன் வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் தனது கல்விப் பணியை மீண்டும் தொடங்கலாம் என்ற நம்பிக்கையுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

No comments

Powered by Blogger.