Header Ads



இலங்கையின் பணநெருக்கடி குறித்து, வர்ணித்துள்ள இந்திய அமைச்சர்


இலங்கை மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியில் இருப்பதால், இலங்கையின் பாதுகாப்புப் படையினர் இந்தியாவில் பெற்றுக்கொள்ளும் பயிற்சிகளுக்கு பெயரளவிலான கட்டணத்தையேனும் செலுத்த முடியவில்லை என்று மத்திய பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் அஜய் பட் தெரிவித்துள்ளார்.


ஒரு நாட்டின் நிர்வாகம், சிறப்பாக செயற்படாதபோது, ​​​​அது இலங்கையைப் போல் மாறும்.


மோசமான பொருளாதார நிலைமை காரணமாக, அவர்கள் ஏனைய நாடுகளிடம் உதவி கேட்க வேண்டியிருந்தது.


இதில் வேதனையான விடயம், பயிற்சிக்காக இந்தியா வந்த இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு பெயரளவு கட்டணம் கூட செலுத்த முடியவில்லை. 


அவர்கள் இந்த ஆண்டு கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றும், பணம் இருக்கும்போது அடுத்த ஆண்டு செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளதாக அமைச்சர் அஜய் பட் தெரிவித்துள்ளார்.


இந்தியா, ஒவ்வொரு அரங்கிலும் தன்னிறைவு பெற்றுள்ளது, கடவுள் விரும்பினால், உலகை ,இந்தியா வழிநடத்தும் என்வும் அமைச்சர் குறிப்பிட்டார்.

1 comment:

  1. இந்தியா என்பது ஒரு மலக்குழி.. ஹிந்து தீவிரவாதம் இருக்கும் வரை ஒரு போதும் முன்னேற முடியாது. மாறாக சீனாவிடம் அடி வாங்கி துண்டு துண்டாக சிதரிப்போகும்

    ReplyDelete

Powered by Blogger.