நிலத்தில் தூக்கி அடிப்பேன்
பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசத்திற்கு கட்சிக்குள் எதிர்ப்புகள் வலுத்து வருவதாக தெரியவருகிறது. இரண்டு சந்தர்ப்பங்களில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், சாகர காரியவசத்தை தாக்க முயற்சித்துள்ளனர்.
22வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் தொடர்பாக நடந்த ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, சாகர காரியவசத்தை தாக்க முயற்சித்துள்ளார்.
இதனையடுத்து பிரதமர் தினேஷ் குணவர்தன தலையிட்டு, அவர்களை சமாதானப்படுத்தியுள்ளார்.
22வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும் தினத்திற்கு முதல் நாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே, சாகர காரியவசத்தை மோசமாக திட்டியுள்ளதுடன் கட்சியின் செயலாளர் என பாராது தூக்கி நிலத்தில் அடிப்பேன் எனக் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆம் கூறியவரும் கூறப்பட்டவரும் நிலத்தில் தூக்கியடிக்கத் தகுதியானவர்கள் தான். எனவே சுருக்கமாக இருவரையும் பசளைச் சாக்கில் போட்டு இறுக்கமாகக் கட்டி பக்கத்தில் உள்ள ஊத்தைப் பெட்டியில் அமுக்கி குறைந்தது 3 மணித்தியாலங்களாவது உயிருடன் வைத்தால் அவர்கள் பிரதிநித்துவப்படுத்தும் தேர்தல் தொகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள்.அத்துடன் அந்த 225 பேருக்கும் பொருத்தமான ஒரு பெரிய ஊத்தைப் பெட்டியை அல்லது பெட்டிகளைச் செய்து அவர்கள் அனைவரையும் அசுத்தம் கொட்டும் பெட்டியில் போட்டு அமுக்கி மூடிவிட்டால் தற்காலிகமாகவேனும் இந்த நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம்.
ReplyDelete