Header Ads



டீசல் விலை குறைந்தாலும் பஸ் கட்டணம் குறையாமலிருப்பது ஏன்..?


ஆட்டோ டீசல் ரூ. 15 ஆல் குறைக்கப்பட்டுள்ள போதும் பேருந்து கட்டண திருத்தத்தை கருத்தில் கொள்ள இந்த விலை குறைப்பு போதுமானதாக இல்லை என்று தேசிய போக்குவரத்து ஆணையம் (NTC) தெரிவித்துள்ளது.


NTC பணிப்பாளர் நாயகம் நிலான் மிரண்டா இதுகுறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பேருந்து கட்டண திருத்தம் மேட்கொள்ளப்பட வேண்டுமாயின் ஒரு லீற்றர் டீசலின் விலை 4% அல்லது அதற்கும் அதிகமாக குறைக்கப்பட வேண்டும். இருப்பினும், தற்போதைய டீசல் விலைக்கு இணையாக பேருந்து கட்டணத்தை மாற்றுவதற்கான கணக்கீடு நடந்து வருகிறது.


இதேவேளை, தற்போதைய டீசல் விலை குறைப்பு பஸ் கட்டண மீளாய்வுக்கு உதவாது என மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் சங்கத்தின் (IPPBA) தலைவர் சரத் விஜித குமார தெரிவித்துள்ளார்.


டீசல் விலை குறைந்தாலும் மசகு எண்ணெய், டயர், டியூப், பேட்டரி, வாகன சேவை கட்டணம், உதிரி பாகங்களின் விலை குறையவில்லை. தற்போதுள்ள பேருந்துக் கட்டணத்தை மேலும் குறைக்கும் பட்சத்தில் எங்களால் சேவையை தொடர முடியாது என்றார். (சதுரங்க சமரவிக்ரம)

No comments

Powered by Blogger.