டுபாய், ஓமான் நாடுகளில் காணாமல் போகும் இலங்கையர்கள் - விசாரணை ஆரம்பம்
துபாய் மற்றும் ஓமான் நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் நபர்களை அழைத்துச் சென்று காணாமலாக்கும் ஆட்கடத்தல்காரர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பொலிஸாருடன் இணைந்து விசாரணை செய்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களை வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்பும் போது அவர்களுக்கு பயிற்சி திட்டங்களை வழங்குவது தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
Post a Comment