திலினியின் திகோ குழுமம் பதிவு செய்யப்படவில்லை - மத்திய வங்கி
நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திகோ குழுமத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலியின் தொடர்பில் மத்திய வங்கி அறிவித்துள்ளது.
திகோ குழுமம், மத்திய வங்கியின் கீழ் பதிவு செய்யப்படவில்லை என்பதுடன், இது தொடர்பில் மத்திய வங்கியின் வங்கி சாரா நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் திணைக்களம் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த நிறுவனம் மேற்கொண்டதாக கூறப்படும் மோசடியான நிதி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் ஊடகங்களில் தகவல் வெளியாகும் முன்னர் மத்திய வங்கிக்கு முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment