Header Ads



அரசியல், மாணவர் , பொது, சிவில், தொழிற்சங்கங்க, செயற்பாட்டாளர்கள் மேற்கொண்டுள்ள தீர்மானம்


அடக்குமுறைக்கு எதிராக நவம்பர் 2 ஆம் திகதி கொழும்பில் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுப்பதற்கு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள் , பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் இன்று -13- கூட்டாக தீர்மானித்துள்ளனர்.


போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான ஒன்றிணைந்த கலந்துரையாடல் கொழும்பு பொது நூலகக் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.


ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, முன்னிலை சோசலிசக் கட்சி, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இலங்கை ஆசிரியர் சங்கம், இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இதில் பங்கேற்றிருந்தனர். 

1 comment:

  1. அடக்குமுறைகளை பலவந்தமாக மேற்கொள்பவர்கள் அவர்களுடைய செயலை நியாயப்படுத்த சட்டத்தின் செறுகுதல்களை நுட்பமாக அவதானித்துவருகின்றனர். எனவே இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள் உரிய சட்டத்தரணிகளின் ஆலோசனைகளின் பிரகாரம் சமாதானத்தைப் பேணி, எந்தவகையிலும் சட்டத்துக்கும் பொதுமக்கள், பொதுச் சொத்துக்களுக்கு இடையூறுகள் ஏற்படாவண்ணம் பார்த்துக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம். இத்தகைய ஆர்ப்பாட்டங்களுடன் தற்போது குறைந்த பட்சம் இலங்கை அரசுடன் தொடர்பாக செயற்பட்டு வரும் வௌிநாடுகளுடன் நெருக்கமாகச் செயற்பட்டு பலவந்தமாக ஆட்சியியை அனுபவித்து வருபவர்களுக்கு எதிராக அல்லது நியாயமான விடயங்களைத் தொடர்ந்தும் அவர்களுக்கு அறிவித்து கருத்து ரீதியாக அவர்களை இந்த கெட்ட நபர்களுக்கு எதிராகச் செயற்படத்தூண்டும் வகையில் செயற்பட்டால் நிச்சியம் இந்த அடவாடித்தனங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம் என நம்புகின்றேன். நியாயத்துக்கும் உண்மைக்கும் உலகில் எங்கோ ஒரு மூலையில் நிச்சியம் நியாயம் கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கையில் தொடர்ந்தும் இயங்க ​வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.