Header Ads



இலங்கை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் விடுத்துள்ள அறிவிப்பு


கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடல் சுதந்திரம் போன்ற அடிப்படை உரிமைகளை மதித்து செயற்படுவது அவசியமானது என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன்(Ursula von der Leyen) தெரிவித்துள்ளார். 


பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு எப்போதும் ஆதரவளிக்க ஐரோப்பிய ஒன்றியம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


GSP+ உறுதிமொழிகளை ஐரோப்பிய ஒன்றியம் மிக விரைவில் ஆராயும் என உர்சுலா அனுப்பியுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதன் அறிக்கை இந்த ஆண்டின் இறுதியில் அல்லது 2023ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அனைத்து இலங்கையர்களின் குறுகிய, நீண்ட கால தேவைகளை உறுதிப்படுத்தும் கொள்கைகளை அறிமுகப்படுத்தி இந்த அறிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. NF

No comments

Powered by Blogger.