Header Ads



மரணத்திற்கு நியாமான தீர்வு கிட்டும்வரை உடலை அடக்கமாட்டோம், பொலிஸ் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்


கனவரெல்ல தோட்டத்தில் தோட்ட நிர்வாகத்தின் கவனக்குறைவாலும் அழுத்தத்தாலும் தோட்டத் தொழிலாளி மரணமடைந்தமை வன்மையாக கண்டிக்கத்தக்கதென இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.


கனவரல்ல EGK தோட்ட பிரிவில் தோட்ட தொழிற்சாலையில் கடமை புரிந்த 25 வயதுடைய அதே தோட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வேலை நேரத்தில் வேலைக்கு அப்பாற்பட்டு தோட்ட தொழிற்சாலை அதிகாரி ஒருவரின் குடியிருப்புக்கு நீர் குழாய் திருத்துவதற்காக சென்ற வேளை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்த தொழிலாளியின் மரணத்திற்கு நியாமான தீர்வு எட்டப்படும் வரை பூதவுடல் அடக்கம் செய்யப்படமாட்டாது என செந்தில் தொண்டமான் பெருந்தோட்ட நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளதுடன் இச்சம்பவம் குறித்து பொலிஸ் கடுமையான நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பசறையில் போராட்டம் வெடிக்கும் என எச்சரித்துள்ளார்.


No comments

Powered by Blogger.