ரணிலுக்கு மைத்திரிபால வழங்கிய சான்றிதழ்
கடந்த காலத்தில் நாட்டில் காணப்படட சூழ்நிலையில், இருந்து நாட்டை ஒரளவு மட்டத்திற்கு கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு முடிந்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதிக்கு நாட்டுக்குள் அமைதியான நிலைமையை ஏற்படுத்த முடிந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதிக்கு அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற அந்த கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் அணி ஆகியவற்றுக்கான புதிய அதிகாரிகளை நியமிக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி வேலைகளை செய்யும் போது, பொதுஜன பெரமுனவினரால் சில அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன. அது பிரச்சினைக்குரியது எனவும் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment