Header Ads



நாட்டின் சகல பிரச்சினைகளுக்கு மத்தியிலும், உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றிருப்பது மிகப்பெரிய சாதனை


WorldPackers.com என்ற பிரபலமான இணையபயண சமூக தளத்தின்படி , உலகில் பயணம் செய்யக்கூடிய முதல் 13 பாதுகாப்பான நாடுகளில் இலங்கை தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது . 


குறித்த இணையத்தின் அண்மைய தகவல் ஒன்றின்படி , பாதுகாப்பான 13 நாடுகளில் , இலங்கை 12 வது இடத்தைப் பிடித்துள்ளது . 


இது குறித்து , கருத்து தெரிவித்துள்ள இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, 


நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கு மத்தியிலும் , உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றிருப்பது மிகப்பெரிய சாதனையாகும் என்று குறிப்பிட்டுள்ளார் . அத்துடன் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்துக்குள் ரூபாயின் மதிப்பு நிலையாகி , நாடு மிகச் சிறந்த நிலைக்கு வரும் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் . 

1 comment:

  1. இலங்கை பயணம் செய்வதற்கு பாதுகாப்பான நாடு என உலக நாடுகள் வரிசைப்படுத்தியிருப்பதன் பின்னணியில் அரசாங்கமோ அல்லது அதனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மந்தி(ரி)களோ இல்லை. அதன் இரகசியம் இந்த நாட்டு மக்கள் உல்லாசப்பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்குகின்றார்கள் என்பதுதான் உண்மை. இந்த நாட்டு மக்களிடம் இயல்பாக உள்ள விருந்தோம்பல், விருந்தினரை மரியாதையாகவும் அன்பாகவும் நடத்தும் பண்பு போன்றவற்றை விருத்தி செய்வதற்குப் பதிலாக அரசியல்வாதிகள் அதனை அழித்து இனமோதல்களையும் இனவெறுப்புகளையும் தான் விதைத்தார்கள். இந்த நாட்டின் இழிநிலைக்கும் இந்த அரசியல்வாதிகள் தான் பிரதான காரணம். ஆனால் துரதிருஷ்டவசமாக இன்னமும் இனத்துவேசத்தை வளர்ப்பதைத்தவிர இந்த நாட்டு மக்களின் நலன்களுக்கு எந்த உருப்படியாக எதனையும் செய்யவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.