Header Ads



லண்டனில் ரணிலுக்கு காத்திருந்த அதிர்ச்சி

பிரித்தானிய மகாராணிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க லண்டன் சென்றிருந்த போது, வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் பிரித்தானிய அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளை சந்திப்பதற்காக விசேட இராப்போசன விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


ஜனாதிபதியின் சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட நிரஞ்சன் தேவாதித்யா இதற்கான திட்டமிடலைத் மேற்கொண்டார்.


நிரஞ்சன் தேவாதித்யா, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் முன்பு பணியாற்றியதால், பிரிட்டிஷ் ஆளும் கட்சியுடன் நெருங்கிய உறவைக் கொண்டவராகக் கருதப்படுகிறார்.


இந்த சந்திப்புக்காக தேவாதித்யா லண்டனில் போல்மாலில் உள்ள இராணுவம் மற்றும் கடற்படை கிளப்பில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்துள்ளார்.


எனினும், ராணியின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட பிற நாடுகளின் தலைவர்கள் மற்றும் உயர்மட்ட பிரிட்டிஷ் அரசாங்க அதிகாரிகள் இந்த இரவு விருந்திற்கு அழைக்கப்பட்ட போதிலும், குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.


பல ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராகப் பணியாற்றிய டேவிட் கமரூனைத் தவிர, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் எவரும் இதில் கலந்து கொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. TW

No comments

Powered by Blogger.