ஆட்சியாளர்கள் பாசாங்கு செய்கின்றார்கள், மக்களுக்கு பொய் கூறப்படுகிறது
மக்கள், அரசியல் அமைப்பில் திருத்தங்கள் கோரவில்லை எனவும் மாறாக முழுமையான மாற்றத்தையே கோருவதாகவும தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மக்கள், அரசியலமைப்புச் சட்டத்தை சிதைக்க வேண்டாம் எனவும் முறைமை மாற்றத்தையே கோருகின்றனர் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
அரசியலமைப்பின் 17வது திருத்தத்தின் பின்னர் அரசியலமைப்பின் கறை படிந்ததாக அவர் கூறினார். அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம் ஒரு மோசடி என்றும் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்காது என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.
அரசியலமைப்பின் 22வது திருத்தம் தொடர்பில் அரசாங்கம் மக்களுக்கு பொய் கூறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் குற்றம் சுமத்தியுள்ளார்.
"உண்மையில் நீங்கள் எந்த சீர்திருத்தமும் செய்யாத நிலையில், சில சீர்திருத்தங்களை செய்துள்ளதாக நாட்டிற்கு பாசாங்கு செய்கிறீர்கள்," என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்துகொண்டால் வீதியில் இறங்குவார்கள் என அவர் எச்சரித்தார்.
Post a Comment