மகிந்த மீண்டும் பிரதமராகலாம், அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை, மக்கள் அவரை வீட்டுக்கு செல்லுமாறு கூறவுமில்லை
மக்கள் ஒருபோதும் மகிந்த ராஜபக்சவை வீட்டுக்கு செல்லுமாறு போராட்டம் நடத்தவில்லை அவர் மீண்டும் பிரதமராகலாம் என பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண பனை அபிவிருத்தி சபை தலைமை அலுவலக கட்டடத் தொகுதி திறப்பு விழாவில் கலந்துகொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மக்களின் எதிர்ப்பினால் சற்று விலகி இருக்கின்றாரே தவிர அவரை வீட்டுக்கு செல்லுமாறு மக்கள் பணிக்கவில்லை.
இவ்வாறான நிலையில் அவர் மீண்டும் பிரதமராக வருவதில் எந்த பிரச்சினையும் கிடையாது.
ஆனால் நாடாளுமன்றத்தில் உரிய முறையில் தெரிவு இடம்பெறும் போது அவர் மீண்டும் பிரதமராக வரக்கூடிய சாத்தியகூறு காணப்படுகிறது.
எனினும் தற்போதுள்ள பிரதமருக்கு நாங்கள் முழுமையான ஆதரவினை வழங்கி வருகின்றோம்.”என தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற காபிர்கள் தான் உண்மையான பயங்கரவாதிகள் என்பதை இந்த நாடும் அரசாங்கமும் சரியாக விளங்கும் போது தான் இந்த நாட்டுக்கு விடிவு ஆரம்பமாகும். அதுவரை இந்த நாடு செல்லும் வழி நரகத்துக்கான பாதையாகும்.
ReplyDelete