ஆங்கில எழுத்தாளர் சித்திக் கவுஸ் கனடாவில் காலமானார்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் மூத்த உறுப்பினரும் பிரபல ஆங்கில எழுத்தாளருமான அல் ஹாஜ் சித்திக் கவுஸ் (வயது 73) கனடா டோரன்டோவில் திங்களன்று 10-10-2022 காலமானார். இவரது ஜனாஸா டோரன்டோவில் இடம்பெற்றது.
இவருக்காக வெள்ளிக்கிழமை ஜும்மாஆத் தொழகையின் பின் வெள்ளவத்தை ஜும்மா பள்ளிவாசலில் ஜும்ஆத் தொழுகையின் பின் மறைவான ஜனாஸா தொழுகை நடைபெறவுள்ளது.
மர்ஹும் கவுஸ் முஸ்லிம் மீடியா போரத்தின் பத்திரிகை ஆசிரியர்.மற்றும் செயற்குழு உறுப்பினர் பதவிகளை வகித்து போரத்தின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்காற்றியூள்ளார்
பிரபல ஆங்கில எழுத்தாளரான இவர் தேசிய பத்திரிகைகளில் இஸ்லாம் மற்றும் தற்கால விவகாங்கள் பற் றி நூற்றுக் கணக்கான கட்டுரைகளை எழுதியுள்ளார் .
இவரது மறைவு குறித்து முஸ்லிம் மீடியா ஃபோரம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளது.
Post a Comment