பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்துள்ள கோரிக்கை
பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் பதவிக்கோ அல்லது பிரதி சபாநாயகர் பதவிக்கோ நியமிக்கப்பட வேண்டும் என்ற ஒதுக்கீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் யோசனை முன்வைத்துள்ளது.
அத்துடன் 22 வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்படும் ஆணைக்குழுக்கள் மற்றும் அரசியலமைப்பு பேரவை உட்பட முடிவுகளை எடுக்கும் நிறுவனங்களிலும் பெண்களை உள்ளடக்கும் புதிய ஒதுக்கீட்டு முறையை உள்ளடக்கி, அந்த திருத்தச்சட்டம் திருத்தப்பட வேண்டும் என பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் சபாநாயகரிடம் சுட்டிக்காடியுள்ளது.
பாலின சமத்துவம் மற்றும் சமூக பார்வை தொடர்பில் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் சம்பந்தமாக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விக்கு உட்படுத்தி இருந்தனர்.
இதனிடையே பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினரும் விசேட மருத்துவ நிபுணருமான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தலைமையில் கூடி இந்த விடயங்களை ஆராய்ந்துள்ளது.
Post a Comment