Header Ads



குழந்தைகளை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தாதீர்கள், பிள்ளைகளின் உயிரைப் பணயம் வைக்க வேண்டாம்


போராட்டங்களில் குழந்தைகளை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தாதீர்கள்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ,  பெற்றோரை வலியுறுத்தியுள்ளது.


இவ்வாறான போராட்டங்களில் ஈடுபடுவதன் மூலம் பிள்ளைகளின் உயிரைப் பணயம் வைக்க வேண்டாம் என பெற்றோர் மற்றும் முதியவர்களிடம் தலைவர் உதயகுமார அமரசிங்க கேட்டுக் கொண்டார்.


பொதுமக்கள் போராட்டங்களுக்கு சிறுவர்கள் அழைத்துச் செல்லப்பட்ட பல சம்பவங்கள் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளமை அதிகாரசபையின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.


குழந்தைகளை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதால், தாங்கள் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும் மற்றும் ஒரு சிறப்பு வழக்காக அதை விசாரிக்க தீர்மானித்துள்ளதாகவும் தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.