பிரிட்டனின் அடுத்த பிரதமராகிறார், பணக்கார அரசியல்வாதி ரிஷி சூனக்
கன்சர்வேடிவ் கட்சி எம்பிக்கள் குழு தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்து பென்னி மோர்டான்ட் விலகிய பின்னர், ரிஷி சூனக் பிரிட்டனின் அடுத்த பிரதமராக பதவியேற்க ஆயத்தம் ஆகியிருக்கிறார்.
வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள பணக்கார அரசியல்வாதிகளில் ஒருவராக அறியப்படும் சூனக், 44 நாட்கள் மட்டுமே பிரதமர் பணியில் இருந்து விட்டு வெளிச்செல்லும் லிஸ் ட்ரஸ்ஸுக்குப் பதிலாக, கிங் சார்ல்ஸால் அரசாங்கத்தை அமைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவார்.
முன்னதாக, செப்டம்பரில் பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில் தோல்வியடைந்த ரிஷி சூனக் இப்போது பிரதமராகும் கட்டத்தை நெருங்கி காணப்பட்டார். இந்த நிலையில், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனைத் தொடர்ந்து திங்கட்கிழமை பென்னி மோர்டான்ட் போட்டியிலிருந்து விலகினார். இதைத்தொடர்ந்து ரிஷி சூனக் புதிய பிரதமராக தகுதி பெற்றிருக்கிறார்.
Post a Comment