உங்களது பெயர், வாக்காளர் இடாப்பில் உள்ளதா..?
2005 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதிக்கு முன்னர் பிறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பதிவில் உள்ளடக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துவதற்கு அந்தந்த கிராம உத்தியோகத்தர்களை தொடர்பு கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று 14/10/2022 பொதுமக்களைக் கோரியுள்ளது .
மின்னணு பதிவேட்டில் இல்லாதவர்கள் அக்டோபர் 19 ம் திகதிக்குள் கிராம நிர்வாக அலுவலர்களை சந்திக்க வேண்டும் என்று ஆணைக்குழு கேட்டுள்ளது .
பொது மக்கள் தங்கள் பெயர்கள் உள்ளதா என்பதை அந்தந்த கிராம அலுவரிடம் சரிபார்க்கலாம் .
அல்லது தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளமான www.elections.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று மக்கள் தமது பெயர் இருப்பை சரிபார்க்க முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
Post a Comment