ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு எரிபொருள் வருமா..?
ரஷ்யா - இலங்கைக்கு நீண்டகாலமாக வழங்கி வரும் ஒத்துழைப்பிற்கு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அந்நாட்டின் பிரதிப் பிரதமர் அலெக்ஸான்டர் நொவெக்கிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அமைச்சருக்கும் பிரதிப் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு தலைநகர் மொஸ்கோவில் சமீபத்தில் இடம்பெற்றுள்ளது.
அந்நாட்டிலிருந்து நேரடியாக எரிபொருளைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் உயர் கல்வியைத் தொடரும் மாணவர்களின் சேம நலன்கள் குறித்தும் அமைச்சர் இதன் போது பிரதிப் பிரதமருடன் கலந்துரையாடியுள்ளார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
Post a Comment