நீர்கொழும்பு மேயரின் நடவடிக்கைகளை கண்டித்து, மாநகர சபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்
- Ismathul Rahuman -
நீர்கொழும்பு மேயருக்கு எதிராக மாநகர சபை உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை நீர்கொழும்பு பஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வியாழக் கிழமை இடம்பெற்ற மாநகர சபையின் மாதாந்தக் கூட்டத்தின் போது எதிர்கட்சியின் உறுபினர் ஒருவர் மாநகர சபை சொத்துக்களை விற்பதற்கு எதிராக கருத்துக்கூறிய போது
ஏற்பட்ட சொற்போரில் மேயர் தயார
லானசா சபைக்கு ஒவ்வாத தூசன வார்த்தைகளை பயன்படுத்தி ஏசியுள்ளார். இதனையடுத்து எதிர்கட்சியின் உறுப்பினர்கள் அவருக்கு எதிராக குரல் கொடுத்து சபையில் வாதப் பிரதி வாதங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து மேயர் தயான் லான்சா ஏழு எதிர்கட்சி உறுப்பினர்களை ஒரு மாத காலம் சபை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கும் பிரேரணை ஒன்றை கொண்டுவந்து நிரைவேற்றி அவர்களை சபையிலிருந்து வெளியேற்ற முயற்சித்துள்ளார்.
இருந்தாலும் அந்த உறுப்பிணர்கள் வெளியே செல்லாததினால் பொலிஸார் வரவழைக்கப்பட்டு அவர்களை வெளியேற்ற எடுத்த முயற்சியும் கைகூடவில்லை. அந்த ஏழு உறுப்பினர்களும் சபையிலேயே இருந்தனர்.இச்சந்தர்பத்தை பயன்படுத்தி அன்றைய தின பிரேரணைகளை நிரைவேற்றியுள்ளனர்.
இந்த செயல்பாடுகளை கண்டித்தே எதிர்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் மேயருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாகக் கூறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகர சபை ஐதேக உறுப்பினர் சங்கீத் பேரேரா இங்கு கருத்துத் தெரிவிக்கையில் மேயரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை நாம் சில மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்தோம்.
நாம் ஊர்ஊராகச் சென்று இதனை நடைமுறைப்படுத்த முயற்சி எடுப்போம்.
வியாழக்கிழமை நடைபெற்ற சபை நடவடிக்கையின் போது மேயர் தயார லான்சா நகராதிபதியின் பதவிக்கே இழுக்கு ஏற்படும் விதத்தில் செயல்பட்டார். மிகவும் தூசவார்த்தைகளால் உறுப்பினர்களை ஏசினார்.
சபையின் சிறிய காலப் பகுதிக்குள் சபைக்குச் சொந்தமான சொத்துக்களை விற்பதற்கு அல்லது குத்தகைக்கு விட முயற்சிக்கிறார். இதற்கு நாம் இடம்கொடுக்கமாட்டோம்.
இவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிற்கும், கம்பஹா மாவட்ட உள்ளுராட்சி மன்ற ஆணையாளருக்கு அறிவிப்போம். எம்மிடம் போதுமான சாட்சியங்கள் உள்ளன என்றார்.
Post a Comment