Header Ads



மொட்டுவின் திருட்டு வளையம், மீளெழுச்சி பெறும் விதத்தை விளக்கும் எதிர்க்கட்சி தலைவர் சஜித்


தோற்கடிக்கப்பட்ட மொட்டு திருட்டுத் தரப்பு,தற்போதைய ஜனாதிபதியால் நிர்மாணிக்கப்பட்ட தொங்கு பாலத்தின் மூலம் இன்று மீண்டும் எழுந்து நிற்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.


பொதுவாக நாட்டு மக்கள் ஜனாதிபதி ஒருவரை தேர்வு செய்வது நாட்டை கட்டியெழுப்பவதற்கு குறித்த ஜனாதிபதி முன்வைக்கும் வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயாகும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,தற்போதைய ஜனாதிபதியை மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மூன்று வாக்குறுதிகளின் அடிப்படையிலயே தெரிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.இதன்படி தீயினால் எரிந்த வீடுகளுக்கு நட்டஈடு பெறல்,பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தல்,நான்கு வருடங்களுக்குத் தேர்தல் வரைப்படத்தை மாற்றியமைத்தல் என்பனவே குறித்த வாக்குறுதிகளாகும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,தற்போதைய ஜனாதிபதி குறித்த வாக்குறுதிகளை  நிறைவேற்றிக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 


பொல்கஹவெலயில் இன்று (16) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 


இன்று உலக உணவு தினம் என்றும்,இந்நாட்டு மக்களுக்கு உணவுன்ன முடியாதளவுக்குத் தள்ளி, விவசாயிகளை அழித்த அமைச்சர் பிரதிநிதித்துவம் செய்யும் தேர்தல் தொகுதியில் தோற்ற மொட்டு கும்பல் மீள எழுவதற்கு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்,இது விதியின் விளையாட்டு என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


ஒரு நாட்டில் உணவுப் பாதுகாப்பைப் பேணுவதற்கு, ஒன்றோடொன்று தொடர்புடைய நான்கு கூறுகளைப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,அதாவது, பற்றாக்குறையின்றி போதுமான அளவு பௌதீக உணவு இருப்புகளைப் பேணுதல், அனைத்து வகையான உணவு வகைகளையும் பொது மக்கள் கொள்வனவு செய்யும் வகையில் விலை மட்டத்தைப் பேணுதல், உணவின் மூலம் ஒரு வீட்டில் உள்ள அனைவரின் ஊட்டச்சத்துத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உணவுகளை பெறுவதற்கான வாய்ப்புகளைப் பராமரித்தல், தொடர்ச்சியாக நிலையான உணவு விநியோக சங்கிலியைப் பராமரித்தல் போன்றவையே அந்த கூறுகளாகும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,தற்போதைய அரசாங்கம் இந்த அனைத்திலும் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தை பொலிஸாருடன் சுற்றி வளைத்து எமது உறுப்பினர்களை கைது செய்த வன்னமே சாம்பலை துடைத்து எழுச்சி பெற நினைக்கும் மொட்டுவினர் நாவலப்பிட்டியில் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இந்தக்கூட்டத்தின் பின்னர் தானும் நாவலப்பிட்டி கூட்டத்திற்கு செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.