Header Ads



ஆட்டோ கட்டணம் குறைக்கப்படுகிறது


முச்சக்கரவண்டி பயணக் கட்டணக் குறைப்பு தொடர்பில் புதிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.


அதன்படி முச்சக்கரவண்டிகளின் முதலாவது கிலோமீட்டர் பயணக் கட்டணங்கள் 20 ரூபாவால் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


முச்சக்கரவண்டிகளுக்கு எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


இதனையடுத்தே கட்டணக் குறைப்பு தொடர்பான தீர்மானத்தை மேற்கொண்டதாக முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.


இதுவரை முச்சக்கரவண்டிகளுக்கு 5 லீட்டர் பெட்ரோல் மாத்திரமே வழங்கப்பட்டு வந்தது.


எனினும் அதனை இரட்டிப்பாக்குவதாக அரசாங்கம் நேற்றைய தினம் அறிவித்தது.


அத்துடன் இது முதல் கட்டமாக மேல் மாகாணத்தில் எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.