இலங்கைக்கு இண்டர்நெட் வசதியை கொண்டுவந்த மகிந்தவை மைனா என்றும், என்னை பொடி மைனா எனவும் விமர்சிக்கின்றனர்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் தான் இலங்கைக்கு இணைய வசதி கொண்டு வரப்பட்டது என்று முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
2005ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற போது, நாட்டில் 5% மட்டுமே இணைய வசதி இருந்தது.
மகிந்த ராஜபக்சவால் கொண்டு வரப்பட்ட இணைய வசதியால் இளைஞர்கள் இன்று முகநூலில் அதிக நேரம் இருக்கின்றனர் எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இணைய வசதியை கொண்டுவந்த மகிந்தவை “மைனா” என விமர்சிப்பதுடன் என்னை “பொடி மைனா” என கூறுகின்றனர் என்று கூறுகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment