உலகிலேயே நீளமான பயணிகள் ரயிலை இயக்கி, சுவிட்சர்லாந்து சாதனை படைத்தது (அழகான படங்கள் இணைப்பு)
உலக சாதனை ஒன்றை முறியடிக்கும் முயற்சியில் சுவிட்சர்லாந்து இறங்கி, உலகிலேயே நீளமான பயணிகள் ரயிலை இயக்கி அதன் மூலம் இந்த சாதனையை சுவிட்சர்லாந்து படைத்தது
உலகிலேயே நீளமான பயணிகள் ரயிலை இயக்க திட்டமிட்டு, அந்த ரயில் 4550 இருக்கைகளும் 25 பெட்டிகளும் கொண்டதாகும்.
யுனெஸ்கோ பாரம்பரிய பாதையான Albula/Bernina ரயில் பாதையில் இந்த ரயில் இன்று -31- இயக்கப்பட்டது.
சுவிஸ் ரயில்வேயின் 175ஆவது ஆண்டு விழாவை நினைவுகூருவதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும், அதன் பின்னணியில் ஒரு இலாப நோக்கமும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.
ஆம்இ கோவிட் காலகட்டத்தில் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததைத் தொடர்ந்து, மீண்டும் சுற்றுலாப்பயணிகளைக் கவர்ந்திழுக்கும் நோக்கிலும் இந்த சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது
இந்த ரயிலின் நீளம் 1,910 மீற்றர்கள் ஆகும்.
இதற்கு முந்தைய சாதனையானது, பெல்ஜியம் நாட்டில் மேற்கொள்ளப்பட்டது. 1991ஆம் ஆண்டு தேசிய பெல்ஜியம் ரயில்வே நிறுவனம் 1732.9 மீற்றர் நீளமுள்ள ரயிலை இயக்கியதே முந்தைய சாதனையாகும்.
Post a Comment