பொதுஜன பெரமுன புதிய முகத்துடன் பயணத்தை ஆரம்பித்தது ஒரு சின்ன ஜோக் - மைத்திரிபால
எதிர்வரும் நாட்களில் நியமிக்கப்படவுள்ள அமைச்சரவை அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்துகொள்ளும் நம்பிக்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்பது தனக்குத் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று (09) சென்று வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
எனக்குத் தெரியாது. எம்மிலிருந்து சிலர் போய்விட்டார்கள். நாங்கள் அமைச்சு பதவிகளை எடுக்க மாட்டோம் எனத் தெரிவித்த அவர், நாங்கள் சர்வகட்சி அரசாங்கத்தை முன்மொழிந்தோம் ஆனால் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படவில்லை.
சர்வகட்சி அரசாங்கம் அமைத்திருந்தால், சர்வதேச ஒத்துழைப்பு, நிதி உதவி கிடைத்திருக்கும்.
ஆனால், சர்வகட்சி அரசாங்கத்துக்கு ஆளும்கட்சியே விருப்பம் தெரிவிக்கவில்லை.
அந்த நிலையில், அதிகாரபூர்வமாக, ஆளும் கட்சியில், கட்சியாக சேர முடியாது. ஆனால், மக்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவுகளில், நாட்டின் கடுமையாக காணப்படும் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் எடுக்கும் முடிவுகளை நாங்கள் ஆதரிக்கிறோம்.
மேலும் பொதுஜன ஐக்கிய பெரமுன புதிய முகத்துடன் களுத்துறைக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளமையானது, ஒரு சின்ன ஜோக். நான் சொல்ல வேண்டியது அவ்வளவுதான். இது செயற்கையானது என்றார்.
Post a Comment