Header Ads



வரி வலையிலிருந்து யாரையும், தப்பிக்க அனுமதிக்கக் கூடாது - மத்திய வங்கி ஆளுநர்


 வரி வலையிலிருந்து யாரையும் தப்பிக்க அனுமதிக்கக் கூடாது என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். 


நாட்டில் வரி அறவிடப்படும் முறையும், வரி அறவிடும் நிறுவனங்களும் நிலையானதாக இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


வரிச்சுமை நியாயமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,


இலங்கையில் மூன்று நிறுவனங்கள் வரி அறவீடு செய்கின்றன. வருமான வரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம் மற்றும் மதுவரித் திணைக்களம் என்பனவே அந்நிறுவனங்களாகும்.


இந்நிறுவனங்கள் சுயாதீனமாக இயங்க வேண்டும். வரி அறவிடுவதற்கு அந்த நிறுவனங்களை மறுசீரமைக்க வேண்டும்.


நேர்மையான முறையில் வரி செலுத்துவோருக்குச் சுமையை ஏற்படுத்தாமல், உழைக்கும் அனைவருக்கும் வரிச்சுமை நியாயமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். வரி வலையிலிருந்து யாரையும் தப்பிக்க அனுமதிக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.