Header Ads



தற்போதுள்ள அமைச்சுகளே மக்களுக்கு பெரும் சுமை, புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளமை நாட்டுக்கு பெரும் அனர்த்தமாகும்


 மக்கள் விரோத செயற்பாட்டை முன்னெடுத்தால் இறுதியில் பின்வாங்க வேண்டிய நிலையே ஏற்படும் என்பதற்கு அதிஉயர் பாதுகாப்பு வலயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்பட்டுள்ளமை சிறந்த சான்றாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


அதிஉயர் பாதுகாப்பு வலயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இரத்து செய்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே மைத்திரி இவ்வாறு கூறியுள்ளார்.


மேலும் கூறுகையில்,“தவறான முடிவுகளை எடுத்தால் பின்னடைவே ஏற்படும். மக்களுக்கு தேவையான விடயங்களை செய்யாமல், மக்கள் விரோதச் செயலில் ஈடுபட்டால் இதுபோல்தான் நடக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.


தற்போதுள்ள அமைச்சுகளே மக்களுக்கு பெரும் சுமையாகும். இந்நிலையில் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளமை நாட்டுக்கு பெரும் அனர்த்தமாகும் எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.


அதேவேளை, தேசியப் பேரவையில் அங்கம் வகிக்காத கட்சிகளின் முடிவை பாராட்டி ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விசேட அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.”என கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.