Header Ads



விளையாட்டு அமைச்சரை காணவில்லை


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான ரொஷான் ரணசிங்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தரப்புடன் நெருக்கமாகி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதன் காரணமாக அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி வருவதாகவும் பேசப்படுகிறது.


இந்த நிலையில் ரொஷான் ரணசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்நறுவை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து விலக தீ்ர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.


ராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்நறுவை மாவட்ட தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 


பொலன்நறுவையில் நேற்று -15- நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டம் மற்றும் கலந்துரையாடல்களிலும்  விளையாட்டுத்துறை அமைச்சரான ரொஷான் ரணசிங்கவை காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.