அரசாங்கத்திற்கு நாமல் கூறிய விடயம் - தீ வைக்கப்பட்ட வீட்டிற்கு பதிலாக புதிய வீடு கட்ட அடிக்கல்லும் நாட்டப்பட்டது
பொதுஜன பெரமுனவின் புத்தளம் – ஆனமடுவ தொகுதிக்கூட்டம் இன்று -27- நடைபெற்றது.
கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 2022 ஆம் ஆண்டுக்கான தொகுதிக் கூட்டத்தின் ஒரு கட்டமாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவினால் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் தீ வைக்கப்பட்ட வீட்டிற்கு பதிலாக புதிய வீடொன்றைக் கட்டுவதற்கான அடிக்கல் இதன்போது நாட்டப்பட்டது.
நிகழ்வில் உரையாற்றிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, தற்போதைய அரசாங்கம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் மீண்டுமொரு தடவை நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
பொதுஜன பெரமுன அதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கும் எனவும் வியாபாரிகளிடம் அதிக வரியை அறிவிட்டால், அந்த வியாபாரம் வீழ்ச்சியடைவதைத் தவிர்க்க முடியாது எனவும் கூறிய நாமல் ராஜபக்ஸ, வரிக்கொள்கை தொடர்பில் மீண்டும் ஒரு தடவை கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
Post a Comment