ஆட்சியை ஜே.வி.பி.யிடம் ஒப்படைக்க வேண்டுமென்று மக்கள் கூறுகின்றனர் - அநுரகுமார
பல தசாப்தங்களாக ஆட்சி செய்து கொண்டிருந்த ராஜபக்சர்கள் தற்போது காணாமல் போயுள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மீண்டுமொரு ராஜபக்ச முகாம் நாட்டில் ஆட்சியமைக்க முடியாதளவிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சிதறிப் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் அரசாங்கத்தில் இடம்பெறும் ஊழல் மோசடிகளைக் கண்காணிப்பதற்கு ஜே.வி.பியிலிருந்து ஓரிருவரை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்தால் போதும் என்று மக்கள் எண்ணினர்.
ஆனால் இன்று ஆட்சியை ஜே.வி.பி.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இதனைக் கூறும் மக்கள் நினைத்தால் எம்மால் தேர்தலில் வெற்றி பெற முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment