Header Ads



சில தலைவர்கள் இனவாதத்தை விற்று அதிகாரத்திற்கு வந்தனர், ஈஸ்டர் தாக்குதலை கொண்டு மதப் பேதங்களை ஏற்படுத்தினர்


திருட்டு, ஊழல்,துன்புறுத்தல்கள், வன்முறை என்பவற்றால், ஏற்பட்ட பொருளாதார அழிவுகள் காரணமாகவே மக்களுக்கு தற்போது வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.


அளுத்கமை பிரதேசத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற திருப்பலி பூஜையில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


இலங்கையில் சில தலைவர்கள் இன பேதங்களை ஏற்படுத்தி, மக்களை பிளவுப்படுத்தி, இனவாதத்தை விற்று ஆட்சிக்கு அதிகாரத்திற்கு வந்தனர்.ஈஸ்டர் தாக்குதலை அடிப்படையாக கொண்டு மதங்களுக்கு இடையில் பேதங்களை ஏற்படுத்த முயற்சித்தனர்.


இதன் பின்னர், கொள்ளை, ஊழல், துன்புறுத்தல்கள், வன்முறைகளை ஏற்படுத்தினர். இதனால், நாட்டின் பொருளாதாரத்திற்கு அழிவு ஏற்பட்டது.


நாட்டின் அனைத்து மக்களும் தற்போது மிகவும் துன்பகரமான வாழ்வை வாழ்ந்து வருகின்றனர்.மக்கள் வாழ்வதற்கு வழியில் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர் எனவும் பேராயர் மேலும் தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.