Header Ads



மக்கள் அச்சமடைய தேவையில்லை


இலங்கை பெற்றோலிய விநியோகஸ்த்தர் சங்கத்தினர் இன்றைய தினம் -04- சேவை புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



எரிபொருள் விநியோக செயற்பாட்டு செலவினங்களுக்கு பெற்றோலியக் கூட்டுதாபனத்தினால் 45 சதவீத கட்டணக் கழிவு வழங்கப்படுகிறது. 


இந்தநிலையில் குறித்த கட்டண கழிவை மீளப்பெறுவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி இந்த எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய விநியோகஸ்த்தர் சங்கம் தெரிவித்துள்ளது. 


எவ்வாறாயினும் இன்றைய தினம் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 


எனவே, மக்கள் இது குறித்த அச்சமடைய தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.