Header Ads



ஓடிக் கொண்டிருந்த வாகனம் திடீரென தீ பற்றியது (படங்கள்)


யாழ் - மாவிட்டபுரத்தில் காங்கேசன்துறை காவல் நிலையத்துக்கு அருகாமையில் வாகனம் ஒன்று தீயில் எரிந்து முற்றாகச் சேதமடைந்துள்ளது.


பயணித்துக் கொண்டிருந்த வாகனம் திடீரென தீப்பற்றியது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.


இன்றிரவு (சற்றுமுன்) சாரதி மட்டும் பயணித்த போது இந்தத் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.


வாகனத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்ற போதும் சரியான காரணம் கண்டறியப்படவில்லை என்று காவல்துறையினர் கூறினர்.


சம்பவத்தையடுத்து காங்கேசன்துறை கடற்படை முகாமிலிருந்து தீயணைப்பு வாகனம் கொண்டுவரப்பட்டு தீயணைத்த போதும் வான் முற்றாகச் சேதமடைந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டது.




No comments

Powered by Blogger.