வைக்கோலை நாய் உண்பதுமில்லை, மாட்டுக்கும் கொடுப்பதில்லை ஜனாதிபதியிடம் அதிகாரங்களை கோரும் டயானா
சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சுக்கான பொறுப்புக்களை தனியாக வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியுள்ளதாக ராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
எதிர்பார்த்த சேவையை செய்ய வேண்டுமாயின் பொறுப்புக்களை வழங்க வேண்டும்
நாட்டுக்கு சரியான முறையில் எதிர்பார்த்த சேவையை செய்ய வேண்டுமாயின் எனக்கு நிறுவனங்களை ஒதுக்கி உரிய பொறுப்புக்களை வழங்க வேண்டியது அவசியம்.
ஒரு நபரோ அல்லது இரண்டு பேரோ அமைச்சுக்களின் பொறுப்புக்கள் மற்றும் அதிகாரத்தை பிடித்துக்கொண்டிருந்தால், திறமையாக பணியாற்றும் வாய்ப்பு இல்லாமல் போகும்.
அப்படி நடந்தால், வைக்கோலை நாய் உண்பதுமில்லை, உண்ணும் மாட்டுக்கும் கொடுப்பதில்லை என்ற நிலைமையே ஏற்படும். இதன் காரணமாகவே அதிகாரங்களை வழங்குமாறு நான் ஜனாதிபதியிடம் கோரினேன் எனவும் டயனா கமகே கூறியுள்ளார்.
கஞ்சா பயிரிடுவதை சட்டமாக்குதல் மற்றும் இரவு பொருளாதாரம் தொடர்பிலும் டயனா கமகே மீண்டும் கருத்து வெளியிட்டுள்ளார்.
பல நாடுகளில் இரவு பொருளாதாரம் 70 வீதம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.சுற்றுலாப் பயணிகள் டொலர்களை செலவிட வேண்டுமாயின் அவர்களுக்கு இரவு நேர களியாட்ட விடுதிகள் இருக்க வேண்டும்.
சாப்பிடவும் குடிக்கவும் நடனமாடவும் தேவையான சூழல் இருக்க வேண்டும். இரவு 10 மணியுடன் அனைத்தையும் முடிவிடுவது சரியாக இருக்காது.
கஞ்சா பயிரிடுவதை சட்டமாக்குவது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜனாதிபதி ஏற்கனவே குழு ஒன்றை நியமித்துள்ளார்.
கஞ்சாவை பயிரிட்டு, அதன் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்வது சம்பந்தமான யோசனைகளை ஆராய்ந்த பின்னர் அடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக தீர்மானிக்கப்படும் எனவும் டயனா கமகே மேலும் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறைக்கு பொறுப்பான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக ஹரின் பெர்னாண்டோ பதவி வகித்து வருகிறார்.
பெட்டியைக் கட்டிக் கொண்டு சொந்த ஊருக்குப் போக தயாராகுங்கள். இனி கஞ்சா உற்பத்தியும் இரவு விபசார விடுதிகளையும் உங்கள் ஊரில் வைத்துக் கொள்ளுங்கள். எங்கள் ஊர் சமாச்சாரங்களை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம்.
ReplyDelete