மீண்டும் ஜெனீவா செல்கிறார் அலி சப்ரி
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத் தொடரின் நிறைவுப் பகுதியில் பங்கேற்பதற்காக, வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஜெனிவாவிற்கு பயணமாகவுள்ளார்.
எதிர்வரும் 07ஆம் திகதி கூட்டத்தொடர் நிறைவுபெறவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரித்தானியா, கனடா, ஜெர்மனி, மலாவி, மொன்டெநேக்ரோ(Montenegro), வடக்கு மெசிடோனியா(North Macedonia) மற்றும் அமெரிக்காவினால் இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளின் மேம்பாடு போன்ற தலைப்புகளால் தயாரிக்கப்பட்ட பிரேரணை எதிர்வரும் 06ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வௌிவிவகார அமைச்சருடன் அமைச்சின் அதிகாரிகளும் கூட்டத் தொடரில் பங்கேற்கவுள்ளனர்.
பசியில் வாடும் மக்களின் ஒருவேளை உணவு வழங்க யாருமில்லை.ஆனால் அவர்களிடம் உரிஞ்சப்படும் பணத்தைச் சூறையாடி அமைச்சர்களும் அடிவருடிகளும் அங்குமிங்கும் சுற்றி கோடான கோடி பொதுமக்களின் பணத்தைச் சூறையாடிவிட்டால் நாடு முன்னேற்றமடையப்போகிறது என மந்தி(ரி)கள் கூட்டம் கனவுகண்டு கொண்டிருக்கின்றன. இந்த நாட்டு மக்களின் அவலங்களை அவர்களே அனுபவித்துக் கொண்டு சாவுவதற்கு எந்த ஒரு நாட்டுக்கும் மந்தி(ரி)களும் அடிவருடிகளும் தேவையில்லை என்பதை நிச்சியம் இந்த நாட்டு மக்கள் விரைவில் மந்தி(ரி)களுக்கும் உலகுக்கும் நிச்சியம் காட்டுவார்கள்.
ReplyDelete