எதிர்வரும் தேர்தல்களில் குப்பைக் கூடைக்குள், தள்ளப்பட இருப்பவர்கள் யார்..? ஜோன்ஸ்டன் வெளியிட்ட தகவல்
கோட்டாபய ராஜபக்ச போராட்டகாரர்களை திருப்பி தாக்கிய இருந்தால், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பார்கள் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, தெரிவித்துள்ளார்.
பொலன்நறுவையில் நேற்று -16- நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே இதனை கூறியுள்ளார்
கோட்டாபய ராஜபக்ச பதவி விலகி சென்ற நல்லது. அவர் திருப்பி தாக்கி இருந்தால், 1972 ஆம் ஆண்டு 12 ஆயிரம்,93 ஆம் ஆண்டு 60 ஆயிரம் பேர் இறந்தது போல், ஒரு லட்சத்து 20 ஆயிரம் வரையான இளைஞர்,யுவதிகள் இறந்து போயிருப்பார்கள்.
இந்த போராட்டத்தின் பின்னணியில் ரோஹன விஜேவீர மற்றும் அனுர திஸாநாயக்கவின் கும்பலே இருந்தது. டலஸ் அழகப்பெரும, விமல் வீரவங்ச, கம்மன்பில ஆகியோரும் சதித்திட்டங்களிலேயே இருந்தனர்.
இவர்களை எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் குப்பைக்கூடைக்குள் தள்ளுவார்கள் எனவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறியுள்ளார்.
Post a Comment