Header Ads



குறைந்த வருமானம் பெறும் நாடாக, இலங்கையை மாற்ற அமைச்சரவை அனுமதி


இலங்கையை தரமிறக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


சர்வதேச நிறுவனங்களால் வழங்கப்பட்ட தகவல்களைப் பின்பற்றி, எதிர்கால கடன்களை எளிதாக்கும் வகையில் இந்த தரமிறக்கல் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.


அதற்கமைய, இலங்கையின் நிலையை, மத்திய வருமானம் பெறும் நாட்டிலிருந்து, குறைந்த வருமானம் பெறும் நாடாகத் தரமிறக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.