எதிர்க்கட்சி தனது முட்டாள்தனங்களை நிறுத்திக் கொண்டாலே போதும்
எதிர்க்கட்சியானது முட்டாள்தனமான செயற்பாடுகளையும், குரோத மனப்பான்மையையும் கைவிட்டால் சுற்றுலாத்துறை வளர்ச்சி பெறும் என்று அமைச்சர் ஹரீன் தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அதுகோரளவின் கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போது காணி மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், சுற்றுலாத்துறையை மேம்படுத்தி சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்குள் வரவழைக்க நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றது.
மறுபுறத்தில் எதிர்க்கட்சியின் ஒரு சிலர் நாடாளுமன்றத்தை முற்றுகையிட, கைப்பற்ற, அரசாங்கத்தைக் கவிழ்க்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் சுற்றுலாப் பயணிகளை எவ்வாறு வரவழைக்க முடியும்? எதிர்க்கட்சி தனது முட்டாள்தனங்களை நிறுத்திக் கொண்டாலே போதும், எதிர்வரும் டிசம்பர் அளவில் சுற்றுலாத்துறையை பழைய நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்பக் கூடியதாக இருக்கும்.
சுற்றுலாத்துறை மேம்பாடு கருதி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுடன் இணைந்து விசேட எரிபொருள் அட்டையொன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்றும் அமைச்சர் ஹரீன் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
Post a Comment