Header Ads



பல்கலைக்கழக அனுமதிக்காக 93,000 விண்ணப்பங்கள் - 45,000 மாணவர்களை இணைத்துக்கொள்ள தீர்மானம்


இம்முறை பல்கலைக்கழக அனுமதிக்காக சுமார் 93,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 


இவற்றில் சுமார் 45,000 மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.


அதற்கமைய, மருத்துவ பீடத்திற்கு 2,035 மாணவர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதுடன் பொறியியல் பீடத்திற்கு 2,238 மாணவர்களும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.


2021ஆம் ஆண்டின் உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய 171,497 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

No comments

Powered by Blogger.