9 மணிநேர வாக்குமூலம் பதிவுசெய்து விட்டு திலினியின் பங்குதாரரை பிடித்த CID
திக்கோ குரூப் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளரான திலினி பிரியமாலியின் வர்த்தகப் பங்குதாரரை நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது.
சந்தேகநபரான இசுரு பண்டார என்பவரை, நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று திங்கட்கிழமை (17) 9 மணிநேர வாக்குமூலத்தைப் பதிவு செய்ததன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் திலினி பிரியமாலியுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் இதற்கு முன்னர் அமைச்சர் ஒருவரின் செயலாளராக பணியாற்றியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தேகநபர் பல வர்த்தகர்களிடம் அதிக இலாபம் பெற்றுத்தருவதாக கூறி மில்லியன் கணக்கான ரூபாவை மோசடி செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment