டுபாயில் சிக்கித் தவிக்கும் 80 இலங்கைப் பெண்கள் - ஒரு வீட்டில் மாத்திரம் 30 பேர் தடுத்துவைப்பு
டுபாய்க்கு வேலைக்காகச் சென்ற 80 இலங்கைப் பெண்கள் அங்கு சிக்கித் தவிப்பதாக அந்நாட்டுத் தூதரகம் பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரப் பணியகத்துக்குத் தெரிவித்துள்ளது.
இவர்கள் பல்வேறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் ஊடாக டுபாய்க்கு வேலைக்காகச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐம்பது பெண்கள் டுபாயில் உள்ள இலங்கை கொன்சியூலர் அலுவலகத்தில் சிக்கித் தவிக்கின்றனர், மீதமுள்ளவர்கள் ஒரு வீட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று டுபாயில் உள்ள இலங்கை கொன்சியூலர் ஜெனரல் நலிந்த விஜேரத்ன தெரிவித்தார்.
டுபாய்க்கு பணி நிமித்தம் சென்றவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் வந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், இவர்களை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு டுபாயில் உள்ள இலங்கை கொன்சியூலர் அலுவலகத்துடன் இணைந்து செயற்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.
-சி.எல்.சிசில்-
இலங்கை கொன்ஸியூலர் காரியாலயத்தில் தஞ்சமமையும் பெரும்பாலான பெண்கள் சட்டவிரோத, சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு நாடு திரும்ப வேண்டும் என நினைக்கும் போது இலங்கை கொன்ஸுயூலர் காரியாயத்தில் தஞ்சமடைவது சாதாரண விடயம். அவர்களில் உண்மையான தொழிலுக்காக வௌிநாடு சென்றவர்கள் மிகவும் குறைவு. இவர்கள் மோசமான செயல்களில் ஈடுபட்டு அவர்களின் பெயரையும் நாட்டின் பெயரையும் விற்று அவமானப்படுத்தி விட்டு நாடு திரும்ப ஆயிரமாயிரம் பொய்களையும் கட்டுக்கதைகளையும் புனைந்துரைத்து வௌிநாட்டுப்பணியகத்தின் உதவியுடன் நாடு திரும்புகின்றனர். ஒரு சிலர் அன்னிய நாட்டு பிரஜைகளுடன் சுகமாக இன்பம் அனுபவித்து கைது செய்து சிறைவாசம் அனுபவித்துவிட்டு ஒரு குழந்தையுடன் நாடு திரும்பும்போது விமான நிலையத்தில் මගේ බාබා මාගේ අකමැත්තැන් මාව දූශණ කළා අන්තිමට අපට ඉතුරැවුානේ මෙකයි என வாய்கூசாமல் உரைக்கும் அபாண்டமான பொய்யை சிங்கள பத்திரிகைகள் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கின்றன. இதனை எனது பல சொந்த அனுபவங்களை வைத்து கூறுகின்றேன். இத்தகைய செயல்கள் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
ReplyDelete