ட்ரோனை பறக்கவிட்ட 7 பேர் கைது
விக்டோரியா நீர்த்தேக்கத்தின் உயர் பாதுகாப்புப் பகுதியை ஆளில்லா கமெரா மூலம் படம்பிடித்துக் கொண்டிருந்த ஏழு பேர் நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பில் இருந்த இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் ஏழு பேரும் அனுமதியின்றி ட்ரோன் கமெரா மூலம் நீர்த்தேக்கம் மற்றும் அணையின் புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ட்ரோன் மூலம் சுற்றுவட்டாரப் பகுதிகளை புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் எடுக்க வேண்டாம் என பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்திய போதிலும், அறிவுறுத்தல்களை புறக்கணித்து வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர்கள் 7 பேரும் கைது செய்யப்பட்டு ட்ரோன் கமெராவுடன் தெல்தெனிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 31 மற்றும் 32 வயதுடைய வெலிகம மற்றும் தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் கண்டிக்கு சுற்றுலா வந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment