உலகளாவிய பட்டினி சுட்டெண்ணில் இலங்கை 64 ஆவது இடம்
2022 ஆம் ஆண்டில் உலகளாவிய பட்டினி சுட்டெண்ணில் இலங்கை 64 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இந்த ஆண்டு, 121 நாடுகள் பட்டினி சுட்டெண்ணில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த சுட்டெண்ணின் படி இலங்கை 13.6 புள்ளிகளையும் பெற்றுள்ளது கடந்த ஆண்டில் பட்டினி சுட்டெண்ணில் 116 நாடுகளில் இலங்கை 65 ஆவது இடத்தில் இருந்தது.
நாடுகளில் உணவுப் பற்றாக்குறை, சரியான ஊட்டச்சத்து இல்லாமை, குழந்தை வளர்ச்சி, வயதுக்கு ஏற்ப குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் குழந்தை இறப்பு விகிதம் போன்றன இதன் போது கவனத்தில் கொள்ளப்படுகின்றன.
Post a Comment