45 பாராளுமன்ற உறுப்பினர்களை காணவில்லை
(இராஜதுரை ஹஷான்)
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதவர்களில் பெரும்பாலானோர் தனிப்பட்ட ரீதியில் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூல வரைபின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்றது.
சட்டமூலம் 178 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மாத்திரம் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தார்.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட பொதுஜன பெரமுனவின் முன்னிலை பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. 45 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதவர்களில் பெரும்பாலானோர் தனிப்பட்ட ரீதியில் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ளதாக அறிய முடிகிறது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 12 உறுப்பினர்கள் இவ்வாறு வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார்கள்.
அத்துடன் பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் தனிப்பட்ட காரணிகளை அடிப்படையாக கொண்டு வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ஒருசிலர் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிப்பதாக பகிரங்கமாக அறிவித்த பொதுஜ பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளவில்லை. (வீரகேசரி)
Post a Comment