Header Ads



3 வருடம் தேவையாக இருக்கின்றது - ஜனாதிபதியின் பாரியார்


பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் நீண்ட வலுவாக தந்திரமான சக்தியினை உருவாக்க எதிர்காலத்தில் திட்டநடைமுறைகள் வரையப்பட்டு வருகின்றது. தன்னிறைவு அடைந்து வரும் இலங்கையில் தற்போதைய இரண்டு வருடகாலத்தில் கோவிட்  தொற்று நிலைமை காரணமாக பாரிய பின்னடைவு சகல துறைகளிலும் காணபட்டுள்ளன. அவ்வாறான நிலையினை திறம்பட மாற்றுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.


அதற்கு எதிர்வரும் 03 வருடகாலப்பகுதி தேவையாக இருக்கின்றது என ஜனாதிபதியின் பாரியார் மைத்திரீ விக்ரமசிங்க தெரிவித்தார்.


புதிய இயல்பு நிலையில் எதிர்காலத்தைச் செழுமைப்படுத்தல் ( Shaping the Future in the New Normal) என்ற தொனிப் பொருளில் நடாத்தப்பட்டு வரும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக சர்வதேச ஆய்வு மாநாட்டு தொடரில், பல்கலைக்கழக பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவ நிலையத்தினால் “பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் ஊடாகப் புதிய இயல்பு நிலையில் நிலைபேறான அபிவிருத்தியை அடைதல்” என்ற தலைப்பிலான ஆய்வு மாநாடு இன்று கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது.


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவ நிலையப் பணிப்பாளர் பேராசிரியர் சிவாணி சண்முகதாஸ் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.


இந்த ஆய்வு மாநாட்டின் முதன்மை உரையாளராக, இலங்கையின் முதல் பெண்மணியும், களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் சிரேஸ்ட பேராசிரியரும், பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தில் அனுபவம் வாய்ந்த பெண்ணியவாதியுமான மைத்திரீ விக்ரமசிங்கே கலந்து கொண்டு முதன்மை உரை ஆற்றினார்.


இதன்போது கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,


பொருளாதார ரீதியாக பண்புபற்ற வதிவிடங்களை உருவாக்க மனிதாபிமான உதவிகள் மேம்படுத்தப்படும். கடந்தகாலத்தை பின்பற்றாது எதிர்காலத்தில் வலுமையுள்ள சமூக கட்டமைப்பினை உருவாக்க சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றது - என்றார்.


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த முதல் பெண்மணியை யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ் ஸ்ரீசற்குண ராஜா வரவேற்றுக்கொண்டார்.


பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் ஊடாகப் புதிய இயல்பு நிலையில் நிலைபேறான அபிவிருத்தியை அடைதல் தொடர்பான 24 ஆய்வுகட்டுரையும்,12 உபதலைப்புகளுடான ஆய்வுக் கட்டுரைகள் முன்மொழிவுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.


இதில் கொழும்பு, களனி, யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விப் புலமையாளர்கள், மாணவ மாணவிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர். 

No comments

Powered by Blogger.