3 வயது குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது
மொனராகலை தொம்பகஹவெல பிரதேசத்தில் 3 வருடங்களும் எட்டு மாத குழந்தையொன்றை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 29 வயதுடைய தொம்பகஹவெல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் சந்தேகநபர் நேற்று (01) பல சந்தர்ப்பங்களில் குழந்தையை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
குழந்தையின் தாய் குழந்தையை அருகில் உள்ள வீட்டில் விட்டு விட்டு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார், இதன்போதே சந்தேக நபர் இந்த குற்றச் செயலை செய்துள்ளார்.
சந்தேகநபர் சியாம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாலியல் துஷ்பிரயோகம் காரணமாக காயமடைந்த குழந்தை தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தொம்பகஹவெல பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment