ஆசிரியர்களுக்காக தனி பல்கலைக்கழகம், 3 வருட கல்வியுடன், ஒருவருட பயிற்சியின் பின் வகுப்பறைகளுக்கு நுழைய அனுமதி
ஆசிரியர்களை உருவாக்கும் வகையில் தேசிய அளவிலான பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
அமைச்சின் அதிகாரிகளுடன் கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை தெரிவித்த அமைச்சர், இவ்விடயம் தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை தயாரிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாவும் தெரிவித்தார்.
கல்லூரிகளை பல்கலைக்கழக மட்டத்துக்கு கொண்டு வருவதற்கானபல கோரிக்கைகள் தம்மிடம் இருந்ததாகவும் இது குறித்த பூர்வாங்க கலந்துரையாடல் நிறைவடைந்துள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஆசிரியர் தொழிலுக்கான தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களை அமைக்கவுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அது நிறுவப்பட்டதும் பாடங்களின் வகைக்கு ஏற்ப பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றார்.
மூன்று வருட கல்வி மற்றும் ஒரு வருட ஆசிரியர் பயிற்சி வழங்கப்பட்டதும், நான்கு வருடங்களில் தகுதியான ஆசிரியர்கள் வகுப்பறைகளுக்கு நுழைவார்கள் என்று குறிப்பிட்ட அமைச்சர், இதை தவறாக புரிந்து கொள்ளவேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment