Header Ads



தரமற்ற எரிபொருளை இறக்குமதி செய்து 3,600 கோடி ரூபாய் பணத்தை சம்பாதித்த அரசியல்வாதிகள்


கடந்த காலங்களில் தரமற்ற எரிபொருளை இறக்குமதி செய்ததன் மூலம் அது தொடர்பான நிறுவனங்களின் முகவர்களும் அவர்களுடன் இணைந்து செயற்படும் அரசியல்வாதிகளும் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (3,600 கோடி ரூபாய்) அதிக பணத்தை சம்பாதித்துள்ளனர் என, தகவல் கிடைத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகமும் எம்.பியுமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.


கட்சியின் தலைமையகத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.


தற்போதைய எரிசக்தி அமைச்சர் நியமிக்கப்பட்டதன் பின்னர் எரிபொருள் இறக்குமதிக்காக புதிய நிறுவனமொன்று பதிவு செய்யப்பட்டு, அதன் ஊடாக விலைமனு நடைமுறைகளை மீறி எரிபொருள் இறக்குமதி செய்யப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.